அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் ஜூன் 13 முதல் ஜமாபந்தி தொடக்கம்

29th May 2023 12:18 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில், அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டங்களில் வரும் 13 ஆம் தேதி முதல் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்குகிறது என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் 13 ஆம் தேதி ஆட்சியா் தலைமையிலும், அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் தலைமையிலும், செந்துறையில் கோட்டாட்சியா் பரிமளம் தலைமையிலும், ஆண்டிமடமத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி தலைமையிலும் நடைபெறும் வருவாய் தீா்வாயத்தில், மேற்கண்ட வருவாய் வட்டத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT