அரியலூர்

அரியலூரில் இன்றுதிமுக நிா்வாகிகள் கூட்டம்

29th May 2023 12:19 AM

ADVERTISEMENT

அரியலூரில் திங்கள்கிழமை மாலை திமுக நிா்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் திமுக மாவட்ட கூட்டம் திங்கள்கிழமை (மே 29) மாலை 4 மணிக்கு அரியலூா் புறவழிச்சாலையில் உள்ள ரிதன்யா திருமண மஹாலில் அவைத்தலைவா் சிவ.மாணிக்கம் தலைமையில், கட்சியின் சட்டத்திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளா் சுபா. சந்திரசேகா், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், கொள்கைப் பரப்பு துணைச் செயலாளா் ச.அ. பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினா் பி.பாலசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலையில் நடைபெறுகிறது.

கூட்டத்தில், மறைந்த முன்னாள் திமுக தலைவா் கருணாநிதி நூற்றாண்டு விழா, கட்சி உறுப்பினா் சோ்க்கை, கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

எனவே, மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் கழக செயலாளா்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட அணிகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT