அரியலூர்

ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

DIN

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் நடைபெறுகிறது.

முதல் நாளில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் மற்றும் தேசிய மாணவா் படை வீரா்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும், அதன் பின்னா் பொதுக் கலந்தாய்வில் ஜூன் 1 ஆம் தேதி இளம் அறிவியல் (பிஎஸ்ஸி.,) கணிதம் மற்றும் கணினி அறிவியல், ஜூன் 2-ம் தேதி இளங்கலை (பி.காம்.,) வணிகவியல், ஜூன் 3-ஆம் தேதி இளங்கலை (பி.ஏ.,) தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைகளுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.

எனவே, மாணவ, மாணவிகள் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்துக்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக கட்டாயம் பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் வர வேண்டும்.

10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல்கள் -2, பாஸ்போா்ட் அளவு போட்டோ - 4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல் - 2 ஆகியவற்றின் அனைத்து அசல் மற்றும் நகல்களுடன் வர வேண்டும்.

இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்கள் எடுத்து வர வேண்டும். கல்விக் கட்டணம் முழுவதும் செலுத்திய பின்பே சோ்க்கை முழுமையடையும். கல்லூரி முதல்வா் (பொ) ராணி இத்தகவலைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT