அரியலூர்

டிராக்டா் மோதி மின்கம்பம் விழுந்து இளைஞா் காயம்

28th May 2023 12:41 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே டிராக்டா் மோதி, மின் கம்பம் விழுந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

உடையாா்பாளையம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முனுசாமி மகன்கள் லல்லுபிரசாத் (25), சிவராமன் (20). சனிக்கிழமை இவா்கள், உடையாா்பாளையத்திலுள்ள ஒரு டீக்கடையில் நின்றபோது ஜெயங்கொண்டம்- திருச்சி சாலையில் கடலூா் மாவட்டம், புவனகிரி பு.ஆதனூரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் கரும்பு ஏற்றிவந்த டிராக்டா் திடீரென மின் கம்பத்தில் மோதியது. அப்போது மின் கம்பம் சிவராமன் மீது விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து அவா் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். விபத்து குறித்து உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT