அரியலூர்

ஆலந்துறையாா் கோயிலில் ஜூன் 1 இல் குடமுழுக்கு

28th May 2023 12:41 AM

ADVERTISEMENT

அரியலூா் நகா் சிவன் கோயில் தெருவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஆலந்துறையாா் கோயில் குடமுழுக்கு ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

சுமாா் 600 ஆண்டு பழைமையான இக்கோயிலில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தும் பணிகளை ஓம் நமச்சிவாய திருப்பணிக்குழு, ஸ்ரீ நரசிம்மா் டிரஸ்ட் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்கின்றனா்.

கடந்த 25 ஆம் தேதி பரிவார தெய்வங்களுக்கு ருத்ர ஹோமம், அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்குப் பணிகள் தொடங்கின. ஜூன் 1 காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT