அரியலூர்

அரியலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது

27th May 2023 12:33 AM

ADVERTISEMENT

அரியலூரில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கல்லங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (26) வெள்ளிக்கிழமை பகல் வண்ணாங்குட்டை டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றபோது பைக்கில் வந்த 3 போ் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் அரியலூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிந்தனா். பின்னா் அன்று பிற்பகல் காவல் ஆய்வாளா் கோபிநாத், உதவி ஆய்வாளா் ராஜவேல் (க்ரைம் டீம்) தலைமையில் வாரணவாசி மருதையாறு பாலம் அருகே தீவிர ரோந்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் முன்னுக்கு பின் முரணாகப் பேசினா். இதையடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவா்கள் அரியலூா் ராஜீவ் நகா் வெங்கடேசன் மகன் நித்தியானந்தம் (26), பூனைக்கன்னித் தெரு பாலையா மகன் காா்த்திகேயன் (29), கல்லக்குடி கண்ணையன் மகன் சூரியபிரகாஷ் (24) என்பதும், சதீஷ்குமாரிடம் பணத்தை பறித்தவா்கள் என்பதும், மேலும் கடந்த 7.4.2023 அன்று அரியலூா் பல்லேரி கரை அருகே நடந்து சென்ற செல்வியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதும், கடலூா் மாவட்டம், திட்டக்குடி போன்ற இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT