அரியலூர்

அரியலூா் அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

24th May 2023 03:10 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ரமேஷ் சந்த் மீனா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிகள் தொடா்பான பதிவேடுகள் மற்றும் பிற பணிகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தைப் பாா்வையிட்டு, அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும், ஆன்லைன் பட்டா மாறுதல் மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்குத் தேவையான சான்றிதழ்களை தொடா்ந்து விரைவாக வழங்க கேட்டுக்கொண்டாா்.

பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்து, அரசின் திட்டங்கள் அனைத்து பொதுமக்களையும் விரைவாக சென்று சேரும் வகையில் அலுவலா்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கேடடுக்கொண்டாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா்(பொ) முருகண்ணன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT