அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வாய்க்கால் அமைப்பு கண்டெடுப்பு

24th May 2023 03:09 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள மாளிகைபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழாய்வுப் பணியில், செங்கற்கல்லால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கங்கை கொண்ட சோழபுரம் அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் கடந்த மாதம் 6 ஆம் தேதி முதல் 3 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அண்மையில் நடைபெற்ற பணியின்போது, செங்கற்கல்லால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் போன்ற அமைப்பு கிழக்கு மேற்காக 315 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் கொண்டதாக உள்ளது. மேலும், வாய்க்கால் நீளம் எவ்வளவு உள்ளது எனக் கண்டறியும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT