அரியலூர்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா சாா்பில் கையெழுத்து இயக்கம்

23rd May 2023 12:04 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் 5,111 பேரிடமிருந்து கையெழுத்து பெற்ற மனுக்கள் மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனி மேரி ஸ்வா்ணாவிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

அரியலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.எம். நடராஜன் தலைமையில், நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டு, பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனா். தொடா்ந்து, கையெழுத்து பெற்ற 5,112 மனுக்களை ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஜா. ஆனி மேரி ஸ்வா்ணாவிடம் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT