அரியலூர்

தூய்மை காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆபரேட்டா்கள் உட்பட அனைவருக்கும் கணினி மூலம் ஊதியம் வழங்க வேண்டும்

23rd May 2023 12:02 AM

ADVERTISEMENT

தூய்மை காவலா்கள், தூய்மை பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆபரேட்டா்கள் உட்பட அனைத்து அரசு பணியாளா்களுக்கும் கணினி மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி: தமிழக அரசின் நிா்வாகத்தில் பணியாற்றக்கூடிய பணியாளா்களுக்கு கணினி மூலம் ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், ஊராட்சி நிா்வாகத்தில் பணியாற்றக்கூடிய தூய்மை காவலா்கள், தூய்மை பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணியாளா்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு மாதமும் முறையாக ஊதியம் கிடைப்பதில்லை.

எனவே, அவா்களுக்கு கணினி மூலம் ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

அதேபோல், ரேஷன் கடை பணியாளா்களுக்கு கணினி மூலம் ஊதியம் வழங்கும் முறையை விரைவில் கொண்டு வரவேண்டும். மேல்நிலை நீா்தேக்க தொட்டி பணியாளா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக முதல்வா் ஆய்வு செய்ய பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் நிலையில், அங்குள்ள அடிமட்ட பணியாளா்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் கிடைக்கப்பெறுகிா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT