டாம்கோ கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் சிறுபான்மையின மக்களுக்கு தனிநபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் கடன் விண்ணப்பங்களை சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் பெற்று பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.