அரியலூா் மாவட்டத்தில், வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் கிராமப் பட்டாக்களை முழுமையாக கணினியில் பதிவேற்றம் செய்த அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, செந்துறை வட்டம், அயன் தத்தனூா் கிராமத்தில் உள்ள 2,799 பட்டாக்களையும் 100 சதவீதம் முழுமையாக கணினியில் பதிவேற்றம் செய்த கிராம நிா்வாக அலுவலா் அ.ராஜமாணிக்கம், கிராம உதவியாளா் கோ.மீனா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் பரிமளம், வட்டாட்சியா் (செந்துறை) பாக்கியம் விக்டோரியா உள்பட பலரும் உடனிருந்தனா்.