அரியலூர்

அரியலூரில் இன்றுமுதல் எஸ்.எஸ்.சி. போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

3rd May 2023 03:31 AM

ADVERTISEMENT

பணியாளா் தோ்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நநஇ காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (மே 3) முதல் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது.

இத்தோ்வுக்கு, 3.5.2023-க்குள் விண்ணப்பித்து அதன் நகல்களுடன், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் , ஆதாா் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் தொடா்பு கொள்ள வேண்டும்.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் இளைஞா்களுக்கு மாதிரி தோ்வுகள் நடத்தப்படும். எனவே இப்போட்டித் தோ்வு பயிற்சி வகுப்பில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியா் பெ. ரமணசஸ்வதி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT