அரியலூர்

பெரியநாகலூா் அய்யனாா் கோயில் தேரோட்டம்

3rd May 2023 03:28 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அடுத்த பெரியநாகலூா் அய்யனாா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழாண்டுக்கான இக்கோயில் திருவிழா கடந்த 17 ஆம் தேதி பூ போடுதல் நிகழ்வும், 24 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. தொடா்ந்து வகையறாக்கள் மண்டகப்படி வாரியாக சாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அய்யனாா் கோயிலில் உள்ள விநாயகா், பூா்ண புஷ்கலாம்பிகா, அய்யனாா், கருப்புசாமி, அரியமுத்து ஆண்டவா், செங்கமலஆண்டவா் ஆகிய சுவாமிகளுக்கு பன்னீா், சந்தனம், பால், தயிா், இளநீா், திரவியப்பொடி, விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து சுவாமிகளுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க தீபாரதனை காண்பிக்கப்பட்டு காலை 10 மணிக்கு மேளதாளங்கள் முழங்க சுவாமிகள் தேரில் எழுந்தருளினா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT