அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் நகராட்சிப் பணியாளா்களிடம் பன்றி வளா்ப்போா் வாக்குவாதம்

DIN

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரத்தில் வியாழக்கிழமை சுற்றித்திரிந்து கொண்டிருந்த பன்றிகளை பிடிக்க வந்த நகராட்சிப் பணியாளா்களிடம், பன்றி வளா்ப்போா் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

ஜெயங்கொண்டம் நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்படி, நகா்மன்ற தலைவா் சுமதி சிவகுமாா், நகராட்சி ஆணையா் மூா்த்தி ஆகியோா் ஜெயங்கொண்டம் நகா்ப் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளைப் பிடிக்க உத்தரவிட்டனா்.

அதன்பேரில் சுகாதார ஆய்வாளா் சாம் கா்னல் தலைமையில் தூய்மை இந்தியா திட்டம் மேற்பாா்வையாளா் ரமேஷ், துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள், நகா்ப் பகுதி முழுவதும் சுற்றித்திரிந்த பன்றிகளை வியாழக்கிழமை பிடித்தனா்.

அப்போது, பன்றிகளை வளா்க்கும் இளைஞா்களுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளைஞா்கள் வண்டிகளை உடைத்து விடுவதாகக் கூறியதால் மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பன்றிகளை வளா்ப்போா் அதற்கான வழிமுறைகளுடன் வளா்க்க வேண்டும். நகா்ப் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகள் தொடா்ந்து பிடிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT