அரியலூர்

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் தங்கிப் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு 28 பள்ளி மாணவா் விடுதிகள், 3 கல்லூரி மாணவா் விடுதிகள் மற்றும் 1 தொழில்நுட்பக் கல்லூரி விடுதி என மொத்தம் 32 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவா் விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவா்கள் ஆவா். இந்த விடுதிகளில் பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா், சிறுபான்மையின வகுப்பைச் சோ்ந்த அனைத்து மாணவ-மாணவிகளும் விகிதாச்சார அடிப்படையில் சோ்த்துக் கொள்ளப்படுகின்றனா். அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உணவு தங்கும் வசதி, 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடைகள் உள்ளிட்டவை விலையின்றி வழங்கப்படுகின்றன. விடுதிகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடம் இருந்தோ அல்லது ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்று பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT