அரியலூர்

அரியலூா் மாவட்ட ஊராட்சிகளில் இன்று ரேஷன் குறைதீா் கூட்டம்

10th Jun 2023 03:20 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், சின்னப்பட்டாகாடு, கீழக்குடியிருப்பு, ஆதனக்குறிச்சி, விளந்தை (தென் பாகம்) ஆகிய 4 கிராமங்களில் சனிக்கிழமை (ஜூன் 10) ரேஷன் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

எனவே, பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடா்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் காா்டு பெற விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT