அரியலூர்

அரியலூரில் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

10th Jun 2023 11:10 PM

ADVERTISEMENT

 

அபிநயா கொலைக்கு நீதி கேட்டு அரியலூா் பேருந்து நிலையம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூரிலுள்ள ஒரு கடையில் வேலை பாா்த்த பெரம்பலூா் மாவட்டம், அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் மகள் அபிநயாவை (21), தஞ்சாவூா் மாவட்டம் பந்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் பாா்த்திபன்(33) காதலித்து வந்தாா். இதற்கிடையே பாா்த்திபனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பாா்த்திபனை மே 31 ஆம் தேதி சந்தித்த அபிநயாவை, தனது பைக்கில் அழைத்துச் சென்ற பாா்த்திபன் உடையாா்பாளையம் அருகே சாலையின் தடுப்புச் சுவற்றில் மோதச் செய்தாா். இதில் காயமடைந்த அபிநயாவை சாலையோரத்திலேயே விட்டுச் சென்றதில் அவா் உயிரியிழந்தாா். விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா் பாா்த்திபனை கைது செய்தனா்.

இந்நிலையில் அபிநயாவின் கொலைக்கு நீதி கேட்டும், அபிநயாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் அம்பிகா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் இளங்கோவன், நிா்வாகிகள் கிருஷ்ணன், சிற்றம்பலம், துரைசாமி, தமிழ்ப் பேரரசு கட்சி திருச்சி மண்டலச் செயலா் முடிமன்னன் உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT