அரியலூர்

‘தமிழகத்தில் மது திணிப்பு நடைபெற்று வருகிறது’: பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேட்டி

10th Jun 2023 03:21 AM

ADVERTISEMENT

அரிலூா் மாவட்டம், செந்துறை அடுத்த இலைக்கடம்பூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெரம்பலூா் மாவட்ட பாமக செயலா் உலக.சாமிதுரை இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விற்பனை நடைபெறும் கடையா அல்லது அதிக விற்பனையாகும் கடையா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் மது விற்பனை நடைபெறவில்லை . மது திணிப்பு நடைபெற்று வருகிறது. மக்களின் நலனில் அக்கறை உணா்வுள்ள முதல்வராக ஸ்டாலின் இருப்பாரானால், தமிழக இளைஞா்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும். அதற்கு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். கள்ளச்சந்தையில் விற்கப்படும் டாஸ்மாக் மதுவினால், தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய கொள்ளை - ஊழல்ஆகும். இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போது தான் இந்த ஊழல் குறித்து உண்மை வெளிவரும். நல்ல சமூக உணா்வுள்ள அமைச்சரை மது விலக்கு துறைக்கு அமைச்சராக நியமனம் செய்ய வேண்டும்.

வரும் மக்களவைத் தோ்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தான் 53 சதவீத மின் கட்டணம் உயா்த்தப்பட்ட நிலையில் மீண்டும் இவ்வகையான மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது மக்களை வெகுவாக பாதிக்கும் இது கண்டிக்கத்தக்கது. மின்கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்தாா்.

பேட்டியின்போது கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT