அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: இம்முகாமில், பல்வேறு தனியாா் நிறுவங்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்துக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்கின்றனா்.
எனவே, முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தோ்ச்சி மற்றும் தோல்வியடைந்த 19 வயது முதல் 40 வயது வரையிலான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம். மேலும், தனியாா் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையாக ஆள்களை இணையத்தில் தோ்ந்தெடுத்து வருகின்றனா். எனவே, மாற்றுத்திறாளிகள் இந்த இணைய தளத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.