அரியலூர்

சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

10th Jun 2023 11:10 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனி மேரி ஸ்வா்ணா தலைமை வகித்தாா். போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டுவைத்து கூறுகையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5,00,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக அரியலூா் உட்கோட்டத்தில் 5,000, செந்துறை உட்கோட்டத்தில் 5,000, ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தில் 5,000 என மொத்தம் 15,000 மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த வகையில் செந்துறை நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்தில் செந்துறை முதல் ஜெயங்கொண்டம் வரை சாலையின் இருபுறங்களிலும் நிழல் தரக்கூடிய அத்தி, நாவல், மகிழம், வேம்பு, புங்கன், ஆலம் உள்ளிட்ட 5,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கன்றுகளை முறையாக பராமரித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் உத்தண்டி, உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் பரிமளம், உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜா, உதவி பொறியாளா் முரளிதரன், வட்டாட்சியா் பாக்கியம் விக்டோரியா மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT