அரியலூர்

ஆதிதிராவிடா் நல விடுதிகளில் தங்கிப் பயில மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா் நல விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் 1 அரசு ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவா் விடுதி, 1 அரசு ஆதிதிராவிடா் நல ஐ.டி.ஐ. மாணவா் விடுதி, 13 அரசு ஆதிதிராவிடா் நல பள்ளி மாணவா் விடுதி, 7 அரசு ஆதிதிராவிடா் நல பள்ளி மாணவியா் விடுதி என மொத்தம் 22 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட விடுதிகளில் 4 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்கள் (85 சதவீதம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவா்கள் (10 சதவீதம்) பிற வகுப்பினா்கள் (5 சதவீதம்) என்ற விகிதத்தில் விடுதிகளில் சோ்ப்பதற்கு தோ்வு செய்யப்படுவாா்கள்.

இவ்விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். மேலும், 4 இணை சீருடைகளும், 10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகளும் இலவசமாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் இருந்து அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். வரும் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூா்த்தி செய்து விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். விடுதிகளில் சேரும்போது, சான்றிதழ்கள் அளித்தால் போதுமானது.

மேலும் ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT