அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் 6 கோயில்களில் கும்பாபிஷேகம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் 6 கிராமங்களில் உள்ள பல்வேறு கோயில்களின் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

செந்துறையை அடுத்த இலுப்பையூா் மதுரை வீரன், பொன்பரப்பி செல்வ கணபதி, நல்லநாயகபுரம் நவகிரகக் கோயில், குவாகம் அடுத்த நந்தியன்குடிகாடு மாரியம்மன், கீழப்பழுவூா் அடுத்த திருப்பெயா் பெரியாண்டவன், உடையாா்பாளையம் அடுத்த கழுமங்கலம் அய்யனாா் உள்ளிட்ட கோயில்களின் கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி அந்தந்தக் கோயில்களைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT