அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கள்ளூா் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காயமடைந்த பாா்வையாளா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
திருமானூரை அடுத்த கள்ளூா் கிராமத்தில் கடந்த 31ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்த வெங்கனூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த தமிழரசு மகன் கவியரசு (19) தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை நள்ளிரவு கவியரசு உயிரிழந்தாா். இதுகுறித்து கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.