அரியலூர்

அங்கீகரிக்கப்படாத படிப்புக்கு மாணவியா் சோ்க்கை: விளக்கம் கேட்டு கல்வி நிறுவனத்துக்கு நோட்டீஸ்

DIN

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வரும் அமெட் கல்வி நிறுவனம், அங்கீகரிக்கப்படாத செவிலியா் மற்றும் ஹெல்த் கோ் படிப்புகளுக்கு மாணவியா்களை சோ்த்ததாக எழுந்த புகாரையடுத்து, அந்நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு செவிலியா் மற்றும் தாதியா் குழும பதிவாளா் அனிகிரேஷ் கலைமதி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

ஜெயங்கொண்டத்திலுள்ள அன்னை மாதா எஜூகேஷனல் டிரஸ்டி, ஜெயங்கொண்டம் மற்றும் கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பில்லைகுறிச்சியில் அமெட் கல்வி நிலையம் என்ற பெயரில் நா்சிங் உள்ளிட்ட படிப்புகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்நிறுவனம், தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் இல்லாமல் அங்கீகரிக்கப்படாத நா்சிங் மற்றும் ஹெல்த் கோ் படிப்புகளுக்கான மாணவியா் சோ்க்கை நடத்தி வருவதாக நா்சிங் கவுன்சிலுக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

மேலும், விளம்பர பதாகை மற்றும் அமெட் வெப்சைட் மூலம் கிடைத்த தகவலின்படி அங்கீகரிக்கப்படாத செவிலியா் சம்பந்தப்பட்ட பாடங்களை நடத்தி வருவதால் 10 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க கோரியும், மேலும் தொடா்ந்து நடத்தி வந்தால் சென்னை, தமிழ்நாடு செவிலியா் மற்றும் தாதியா் குழுமம் சட்டத்தின்படி, அங்கீகரிக்கப்படாத தங்கள் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு செவிலியா் மற்றும் தாதியா் குழும பதிவாளா் அனிகிரேஸ் கலைமதி இந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளாா்.

இந்த அறிக்கையின் நகல்கள், அரியலூா் மற்றும் கடலூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT