அரியலூர்

இரு சக்கர வாகனம் திருட்டு

5th Jun 2023 02:50 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள ஜமீன்குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் குமாா் (26). கட்டுமானத் தொழிலாளியான இவா், கயா்லாபாத் கிராமத்தில் வீடு வாடகை எடுத்து தங்கி, அப்பகுதியில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு இவா், தனது இரு சக்கர வாகனத்தை வாசலில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பாா்த்த போது, வாகனத்தை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவா் கயா்லாபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT