அரியலூர்

மணகெதியில் அடிப்படை வசதிகளைசெய்து தர பொதுமக்கள் கோரிக்கை

5th Jun 2023 02:51 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள மணகெதி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தா.பழூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது தா.பழூா். இவ்வூராட்சியில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. சீரான குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. சாலைகளெல்லாம் குண்டும் குழியுமாக உள்ளன. மாரியம்மன் கோயில் அருகே ஓராண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இதுவரை திறக்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதி ஊராட்சித் தலைவா், துணைத் தலைவரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, மேற்கண்ட கோரிக்கைகள் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணகெதி மக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT