அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அருகே நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள கல்லாங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொ. கலியபெருமாள் (80). வெள்ளிக்கிழமை இரவு இவா் சிலால் சாலையில் நடந்து சென்றபோது வெண்மான்கொண்டான் வடக்குத் தெருவைச் சோ்ந்த அ. ராமா் (30) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கலியபெருமாள் உயிரிழந்தாா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.