அரியலூர்

அரியலூரில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

4th Jun 2023 12:31 AM

ADVERTISEMENT

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை, பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10% ஆபத்துப் படி வழங்க வேண்டும். இறந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலை துறையிலேயே பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவா் காமராஜ் தலைமை வகித்தாா். கோட்ட துணைத் தலைவா் மூா்த்தி, கோட்ட இணைச் செயலா்கள் உதயசூரியன், ஆசைத்தம்பி, மாநில செயற்குழு உறுப்பினா் அம்பேத்கா், கோட்டச் செயலா் சிவகுமாா் உள்ளிட்டோா் முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT