அரியலூர்

மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

3rd Jun 2023 03:13 AM

ADVERTISEMENT

 

அரியலூா் அண்ணா சிலை அருகே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோட்ட கலால் அலுவலா் முத்துக்கிருஷ்ணன் பங்கேற்று, மதுவினால் ஏற்படும் தீமைகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் இடா்கள், போதைப் பொருள்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில், காவல்துறையினா், இளைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT