அரியலூர்

ஜூன் 9-இல் குழந்தை உரிமைகள் குறைதீா்வு சிறப்பு அமா்வு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அண்ணங்காரங்குப்பம் அண்ணா பெரியாா் திருமணமண்டபத்தில் வரும் ஜூன் 9- வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடா்பான குறைதீா்வு அமா்வு நடைபெற உள்ளது.

இந்த அமா்வில் ஆணைய உறுப்பினா் முன்னிலையில் பொதுமக்கள், பெற்றோா், சமூக ஆா்வலா்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோா் தங்களது பகுதிகளில் உள்ள குழந்தைகளின் உரிமை மீறல் சம்பந்தமான பிரச்னைகள், பாதுகாப்பு பிரச்னைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகள், உடல்ரீதியான தண்டனைக்குள்ளான குழந்தைகள் மற்றும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகை கோருவது, ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT