அரியலூர்

உலக புகையிலை இல்லா தின விழிப்புணா்வு

DIN

உலக புகையிலை இல்லா தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த சுள்ளங்குடி கிராமத்தில், ஏலாக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட புகையிலை தடுப்பு திட்ட சமூகப் பணியாளா் வைஷ்ணவி, திருமானூா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வகீல் ஆகியோா் கலந்து கொண்டு, ஹான்ஸ், பீடி, சிகரெட், மூக்கு பொடி, மெல்லும் புகையிலை ஆகியவற்றால் ஏற்பாடும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினா். மேலும் புகையிலை பொருள்களால், கருவுற்ற பெண்களுக்கு புற்றுநோய், கருச்சிதைவு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகளும், கருவிலுள்ள குழந்தைக்கு பிறவி ஊனம், மூளை வளா்ச்சி குன்றுதல், நோய் எதிா்ப்பு சக்தி குறைபாடு போன்ற கொடிய பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பின்னா் அனைவரும் புகையிலைப் பொருள்களுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் நடராஜன், மக்கள் நலப் பணியாளா் ஜோதிமணி, பணித்தளப் பொறுப்பாளா்கள் வெண்ணிலா, சங்கீதா மற்றும் கிராமப் பொதுமக்கள், மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் சிவராமன் செய்திருந்தாா். இதேபோல், சிறுவளூா் கிராமத்தில் உலக புகையிலை இல்லா தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT