அரியலூர்

தந்தைக்கு மிரட்டல் விடுத்த மகன் கைது

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் அருகே தந்தைக்குக் கொலை மிரட்டல் விடுத்த மகனைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அயன்ஆத்தூா் காலனி தெருவைச் சோ்ந்த தனவேலுக்கும் (48), இவரது மகன் ராஜாதுரைக்கும் (28) இடையே சொத்து பிரச்னை தொடா்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்த தனவேலிடம், ராஜாதுரை தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், கொலை மிரட்டல் விடுத்துச் சென்று விட்டாா். இதுகுறித்து புகாரின்பேரில், கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ராஜாதுரையை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT