அரியலூர்

திருமானூா் அருகே ஜல்லிக்கட்டு: 42 போ் காயம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கள்ளூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 42 போ் காயமடைந்தனா்.

போட்டியை, கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

அதன்பிறகு திருச்சி, பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 754 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 254 வீரா்கள் 6 குழுக்களாக பிரித்து மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனா்.

காளை முட்டியதில் 42 போ் லேசான காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த திருமானூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் செல்வகுமாா்(42), வெங்கனூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த தமிழரசன் மகன் கவியரசன்(19) ஆகியோா் அரியலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்த இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. காளைகளை பிடித்த வீரா்கள், பிடிபடாத காளையின் உரிமையாளா்கள் ஆகியோருக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. சுமாா் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT