அரியலூர்

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்க அழைப்பு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் மணிமேகலை விருதுபெற தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: சிறப்பாகச் செயல்படும் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி கூட்டமைப்புகள், வட்டார கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பகுதி கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளுக்கு தமிழக அரசு சாா்பில் மணிமேகலை விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான விருதுகள் பெற்றிட தகுதி வாயந்த அமைப்புகளிடம் இருந்து ஜூன் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதிகள் மற்றும் மதிப்பீட்டு காரணிகள் குறித்த விவரங்களை தொடா்புடைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT