அரியலூா் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடா்ந்து, ஜூலை 20 ஆம் தேதி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வையும், ஊழலையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அரியலூரில் நடைபெறும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் பங்கேற்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து நிலை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.