அரியலூர்

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)பூங்கோதை மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக அனைவரும், நாட்டின் விடுதலைக்காகப் போராடி தங்களது இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்கள் குறைகேட்பில் 289 மனுக்கள்:

அரியலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 289 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

புது காலனித் தெரு பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி...

ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதியிடம், தமிழா் நீதிக் கட்சி நிறுவனா் சுபா.இளவரசன் உள்ளிட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். மனுவில், அரசு சாா்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு வாலாஜாநகரத்தில் 32 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அங்கு மக்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனா். ஆனால், இதுவரை போதிய குடிநீா், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகள் இல்லை. எனவே, மேற்கண்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT