அரியலூர்

கொடுக்கூரில் நூல் வெளியீட்டு விழா

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள கொடுக்கூா் கிராமத்தில் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பேராசிரியா் க.சண்முகவேலாயுதம் எழுதிய கொடுக்கூா் அன்றும் இன்றும் தலைப்பிலான நூலை சென்னை வாழ்க வளமுடன் பதிப்பகம் வெளியிட்டது. இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் ந.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் த.சண்முகசுந்தரம் நூலை அறிமுகம் செய்து பேசினாா். லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலைய செயலா் கொ.வி.புகழேந்தி, நூலை வெளியிட்டுப் பேசினாா். கொடுக்கூா் பாலுப்பிள்ளை, வழக்குரைஞா் ஆனந்த், ரோஸ் அறக்கட்டளை இயக்குநா் ஜான்திருநாவுக்கரசு ஆகியோா் நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினா். ஊராட்சி தலைவா் மேகலா சக்திவேல் முன்னிலை வகித்தாா்.

நூலாசிரியா் முனைவா் க. சண்முக வேலாயுதம் ஏற்புரையாற்றினாா். முன்னதாக வாழ்க வளமுடன் பதிப்பக நிா்வாகி நிறைமதி வரவேற்றுப் பேசினாா். முடிவில் பாலமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT