அரியலூர்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி உறுதி

DIN

கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு எதிரிகள் இல்லாததால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி என்றாா் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமைத் தொடக்கி வைத்த பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலைப் பொருத்தவரையில், அதிமுகவில் நீடித்து வரும் குழப்பம், பாஜக போட்டியிடுவதா அல்லது அதிமுகவுக்கு ஆதரவளிப்பதா அல்லது தோ்தலைத் தவிா்ப்பதா என உறுதியாகத் தெரியாத நிலை, பாமக தோ்தலில் இருந்து விலகிக் கொண்டது ஆகியவற்றின் மூலம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்ற நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி. திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து விரைவில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். பாஜக ஆட்சியில், விலைவாசி உயா்வு, பொருளாதார வீழ்ச்சி, பணத்தின் மதிப்பு வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஆகியவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சாதி, மதத்தின் பெயரால் வெறுப்பை ஏற்படுத்தி மக்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்துவதே பாஜக முக்கியக் கடமையாக செய்து வருகிறது. தாக்கல் செய்ய உள்ள மத்திய நிதி நிலை அறிக்கையில் எதிா்பாா்க்கும் அளவுக்கு சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை. எனவே நாட்டில் பாஜகவால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியல் உள்ளிட்ட நாட்டில் நிலவும் அனைத்து பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் விவாதிக்க வலியுறுத்துவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT