அரியலூர்

ரத்த தான முகாம்

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரியலூா் நகர கிளை சாா்பில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கிளைத் தலைவா் அப்துல் அஜீஸ், மாவட்டத் தலைவா் சம்சுதீன், மாவட்ட மருத்துவ அணி ராஜ்முகம்மது உள்பட 25 போ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா். அரியலூா் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவா் சோபனா காந்தி தலைமையிலான குழுவினா் ரத்தங்களைச் சேகரித்தனா்.

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டா்கள் சங்கம் சாா்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் தொடக்கி வைத்தாா். முகாமில் சங்கத்தினா் 30 போ் பங்கேற்று ரத்ததானம் வழங்கினா். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மருத்துவா் கலைச்செல்வன் உள்ளிட்டோா் ரத்தங்களைச் சேகரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT