அரியலூர்

க. பொய்யூரில் தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம்

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கடுகூா் ஊராட்சிக்குள்பட்ட பொய்யூா் கிராமத்தில் மாடுகளுக்கு கால் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை ஊராட்சித் தலைவா் தா்மலிங்கம் தொடக்கி வைத்தாா். பொய்யூா் மற்றும் பொய்யூா் காலனி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தங்களுடைய 51 கன்றுகள், 33 கிடேரிகள் மற்றும் கறவை மாடுகள் உள்ளிட்ட 200 கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

கடுகூா் கால்நடை மருத்துவா் குமாா், கால்நடை ஆய்வாளா் மாலதி உள்ளிட்டோா் கொண்ட மருத்துவக் குழுவினா் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட கால்நடை விவசாயிகளுக்கு தோல் கழலை நோய் பற்றிய விழிப்புணா்வு கையேடுகள் வழங்கப்பட்டது. முகாம் முடிவில் கடுகூா் ஊராட்சி துணைத் தலைவா் செந்தாமரை விசுவநாதன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT