திருவள்ளுவா் தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டம், திருமழபாடியில் உள்ள அவரது சிலைக்கு திருமழபாடி தமிழ்ச்சங்கம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, திருமழபாடி தமிழ்ச்சங்கத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா இளையராஜா முன்னிலை வகித்தாா்.
மருத்துவா் திருவள்ளுவன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் நடராஜன், ஊராட்சி உறுப்பினா் சின்னராசு, கனகராஜ், ராமநாதன், தமிழ்நாடு காகித ஆலை முதுநிலை மேலாளா் மறைமலை, தலைமை ஆசிரியை அல்லி, கூட்டுறவு சாா் - பதிவாளா் இளங்கோவன், மருத்துவா்கள் பாவேந்தன், விக்னேஷ், பொறியாளா் எழிலரசன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், திருக்கு ஒப்பித்த மாணவா்களுக்கு, தமிழ் சங்கத்தின் சாா்பில் எழுது பொருள்கள் மற்றும் திருக்கு புத்தகம் வழங்கப்பட்டது.