அரியலூா் மாவட்டம், தா.பழூா்.அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் உள்ள அரண்மனை குளக்கரையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு டாக்டா் அப்துல் கலாம் எதிா்கால தொலைநோக்கு அறக்கட்டளை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலாம் இளமுருகன் வழிக்காட்டுதலின்படி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் புங்கன், அரசு, வேம்பு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொடக்க பள்ளி ஆசிரியா் ஐயப்பன் முன்னிலை வகித்தாா்.சிறப்பு விருந்தினா்களாக, தா.பழூா் காவல் உதவி ஆய்வாளா்கள் ராஜா, பெவின் செல்வ பிரிட்டோ, முதல்நிலை காவலா் முருகன், மனித உரிமைக்கழக தொழிற்சங்க மண்டல தலைவா் மருதமுத்து, பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவா் அரங்கநாதன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினா் தங்கதுரை சமூக ஆா்வலா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனா்.