அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மன உளைச்சலில் இருந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் கிராமத்தைச் சோ்ந்த முத்தையன் மகன் அசோக் குமாா் (19). தள்ளுவண்டியில் பூ வியாபாரம் செய்து வந்த இவா், சின்னவளையம் தெற்குத் தெருவில் வசித்து வரும் தனது அக்கா வீட்டிலேயே கடந்த 3 மாதங்களாகத் தங்கி வந்தாா். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த அசோக் குமாா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசராணை மேற்கொண்டு வருகின்றனா்.