புதுச்சேரி டீக்கடைக்காரரிடம் தினமும் பால் ஏடு கேட்டு அதனை பெற்று செல்லும் காகத்தின் விடியோ வைரலாகியிருக்கிறது.
புதுச்சேரி லாசுப்பேட்டை உழவர் சந்தை அருகே டீக்கடை நடத்தி வருபவர் ரவிச்சந்திரன். இவரது கடைக்கு காலையில் தினமும் வரும் காகம் பிஸ்கட், சமோசா போன்றவற்றை வைத்தால் சாப்பிடுவதில்லை.
அவர் கொடுக்கும் பால் ஏட்டை மட்டும் சாப்பிட்டு செல்கிறது. இதற்காக தினமும் காலையில் டீக்கடைக்கு வரும் காகம், ரவிச்சந்திரனைப் பார்த்து கரைந்து அழைக்கிறது.
இதனையடுத்து பாலில் இருந்து ஏட்டை வடிகட்டி ஒரு கப்பில் அவர் வைக்க அதனை காக்கை எடுத்து சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்து சாப்பிடுகிறது. இந்தக் காட்சி தினமும் லாஸ்பேட்டை உழவர்சந்தை எதிரே நிகழ்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.