தமிழ்நாடு

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: கடலூர் மாவட்டம் 88.49%தேர்ச்சி விகிதம்

19th May 2023 11:46 AM

ADVERTISEMENT

நெய்வேலி: தமிழகத்தில் இன்று 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், கடலூர் மாவட்டம் 88.49 சதவீதம் தேர்ச்சியுடன் 33-ஆவது நிலைக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 232 அரசு பள்ளிகளில் மொத்தம் 16,296 பேர் எழுதினர். இவர்களில் 13,819 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 84.80 சதவிகிதம். மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளிகள் 34, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 3, தனியார் பள்ளிகள் 55 என மொத்தம் 92 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ் பாடத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு...
தமிழ் மொழி பாடத்தில் மொத்தம் 34,184 பேர் தேர்வு எழுதினார். இவர்களில் 31,826 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 93.10 சதவிகிதம். 

இதேபோல் ஆங்கில மொழி பாடத்தில் மொத்தம் 34184 பேர் தேர்வு எழுதியதில், 33,555 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 98.16 சதவிகிதம். இதேபோல், கணிதப் பாடத்தில் 93.15 சதவிகிதம், அறிவியல் பாடத்தில் 94.51 சதவிகிதம்,  சமூக அறிவியல் பாடத்தில் 95.16 சதவீதம் பெற்றுள்ளனர். 
அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி விகிதம் அதிகம் உள்ள நிலையில் தமிழ் பாடத்தில் மட்டும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக ஆங்கில பாடத்தின் தேர்ச்சி சதவீதத்தை விட தமிழ் மொழி பாடத்தின் தேர்ச்சி சதவீதம் 5.06 சதவீதம் குறைவு.

ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில் 246 அரசுப்பள்ளிகள், 46 அரசு உதவிபெறும் பள்ளிகள், 153 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட மொத்தம் 445 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 17,892 பேர், மாணவிகள் 16,292 பேர் என மொத்தம் 34,184 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவர்கள் 15,160 பேர், மாணவிகள் 15,088 பேர் என மொத்தம் 30,248 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 84.73 சதவீதம், மாணவிகள் 92.61 சதவீதம் என மொத்தம் தேர்ச்சி விகிதம் 88.49 சதவீதம். ஆண்களைவிட பெண்களின் தேர்ச்சி விகிதம் 7.88 சதவீதம் அதிகம். 

தமிழ்நாடு அளவில் கடலூர் 88.49 சதவீதம் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் 33 -ஆவது நிலையை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு 89.60 சதவீதம் தேர்ச்சி பெற்று 18 ஆவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT