சண்டிகர் (ஹரியாணா): ஹரியாணா மாநில அம்பாலா தொகுதி பாஜக எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா (72) உடல்நலக்குறைவாவ் காலமானார்
அம்பாலா தொகுதி எம்.பி.யும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான ரத்தன் லால் கட்டாரியா உடல் நலக்குறைவால் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மனைவி பான்டோ கட்டாரியா தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் 12 மணிக்கு சண்டிகரில் உள்ள மணிமஜ்ராவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தன் லால் கட்டாரியா மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, புதன்கிழமை மாலை, முன்னாள் திரிபுரா முதல்வரும், ஹரியாணா பொறுப்பாளருமான பிப்லப் குமார் தேப், ரத்தன் லால் கட்டாரியாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.