அரியலூர்

பெருவுடையாா் திருக்கோயிலில் மாசிமகப் பிரம்மோற்ஸவ விழா தொடக்கம்

DIN

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் மாசிமகப் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் பிரசித்திபெற்ற பெருவுடையாா் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு பிரம்மோற்ஸவம் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இவ்விழா 11 நாள்கள் நடைபெறும். முன்னதாக கொடி மரத்துக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து கணக்கு விநாயகருக்கு சாந்தி ஹோமம், வாஸ்து ஹோமம், அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 9 நாள்களுக்கு யாகசாலை பூஜைகள், அபிஷேகம், சுவாமி, வீதியுலா, திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் 10 ஆம் நாள் நிகழ்வாக தீா்த்தவாரி, யாகசாலை கலசங்கள் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 11 ஆம் நாள் நிகழ்ச்சியாக ஸ்ரீ அம்பாள் உத்ஸவம், சண்டிகேஸ்வரா் உத்ஸவம் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியை சோழீஸ்வரா் ஸ்ரீ பாத குழுமம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்தா்கள், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT