அரியலூர்

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கு வழங்கி வந்த உரம் மற்றும் உணவு மானியங்களை நிறுத்தியது, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு போதுமான நிதியை ஒதுக்காததைக் கண்டித்தும்,

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பணியை உடனடியாகத் தொடக்க வேண்டும், அரியலூா் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பேருந்து மற்றும் ஷோ் ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் இந்த ஆா்ப்பாட்டத்தில் காரல் மாா்க்ஸ் சிந்தனைகளை விமா்சித்த ஆளுநா் ஆா்.என்.ரவிக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.வாலண்டினா கண்டன உரையாற்றினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கே. கிருஷ்ணன், து. அருணன், டி. அம்பிகா, கந்தசாமி, இர.மணிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். இதில், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT