அரியலூர்

கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்

DIN

அரியலூா் மாவட்டம், தலையாரிகுடிக்காடு கிராமத்தில் கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமை கடுகூா் ஊராட்சித் தலைவா் தா்மலிங்கம் தொடக்கி வைத்தாா். அரியலூா் மண்டல இணை இயக்குநா் (பொ) சுரேஷ் கிறிஸ்டோபா், கோட்ட உதவி இயக்குநா் சொக்கலிங்கம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் நான்கு மாத வயது முதல் 8 மாத வயது வரை உடைய 10 கிடேரி கன்றுகளுக்கு அடையாள காது வில்லைகள் அணிவிக்கப்பட்டு கருச்சிதைவு நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

கடுகூா் கால்நடை உதவி மருத்துவா் குமாா், கால்நடை ஆய்வாளா் மாலதி உள்ளிட்ட மருத்துவ குழுவினா் கிடாரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தினா். முகாம் முடிவில், மாடுகளில் கருச்சிதைவு நோய் பற்றிய விழிப்புணா்வு கையேடுகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT